ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி, மின்சார கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்தது.
மின்சார உற்பத்தி தரவுகள் மற்றும் விற்பனை தரவுகள், எரிபொருள், நிலக்கரி மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை மற்றும் இந்த ஆண்டுக்கான மின்சார உற்பத்தித் திட்டம் மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின் உற்பத்திக்கான செலவு தற்போது குறைந்துள்ளது. டீசல், பெற்றோல், நிலக்கரி போன்றவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மின்சாரத் தேவையும் சுமார் 18 சதவீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.