களுத்துறையில் 16 வயதுடைய திஹார நிர்மானி நிஸ்ஸங்க சில்வா என்ற யுவதியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் காலி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் பிரிவு பொலிஸ் குழு இன்று காலை காலி பிரதேசத்தை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது.
சந்தேகநபரை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்டொக் ஊடாக சுமார் 2 மாதங்களாக யுவதியுடன் காதல் வசப்பட்டிருந்த நபர், கடந்த 6ஆம் திகதி யுவதியை விடுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் ஹொட்டலின் 3வது மாடியிலிருந்து கீழே நிர்வாணமாக விழுந்த யுவதி சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.