ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

Date:

ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர்  பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

10-31-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அனுமதி அளித்தது.

இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...