இன்றைய நாணய மாற்று விகிதம்!

Date:

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாவாகவும், விற்பனை விலை 312.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 302.42 ரூபாவாகவும், விற்பனை விலை 316.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நீண்ட இடைவெளியின் பின்னர், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மத்திய வங்கியின் தரவுகளின்படி, இறுதியாக 2022 ஏப்ரல் 6 ஆம் திகதி 300 ரூபாவிட குறைவாக அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி பதிவாகியிருந்ததாக குறித்த திகதியில் டொலரின் கொள்வனவு பெறுமதி 298.10 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 308.49 ரூபாவாகவும் பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி தரவுகள் காட்டுகின்றன.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...