தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தையொட்டி இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நிலையான மற்றும் தொண்டர் படையணியை சேர்ந்த 402 பேருக்கும் ஏனைய பிரிவுகளை சேர்ந்த 3348 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, 07 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
19 கேர்ணல்கள் பிரிகேடியர் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
29 லெப்டினன்ட் கேர்ணல்கள், கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், 33 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.