உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா அதன் அதிகாரிகளை வெளியேற்ற தொடங்கியுள்ளது.
இதையடுத்து அங்கு நிலைமை அபாயகரமாக இருக்கக்கூடும் என ஐ.நா அனைத்துலக அணுசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது.
உக்ரைனியப் படையினர் அங்கு வான் தாக்குதலை அதிகரித்திருப்பதாக கூறிய மாஸ்கோ, சிறு குழந்தைகள், முதியோர்களை கொண்டுள்ள ரஷ்ய குடும்பங்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், அனைத்துலக அணுசக்தி அமைப்பின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைனின் மைக்கொலைவ் வட்டாரத்தில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நேற்று அதிகரித்துள்ளது. தொழில்துறை வட்டாரங்களை குறிவைத்து அது தாக்ப்படுவதாக கூறப்பட்டுள்ளது.