‘ஏனைய மதத்தவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்’

Date:

எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே நாட்டில் இன, மதவாதப் பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள். இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. பாராளுமன்றத்தில் கூட பேசுகிறார்கள். முன்னாள் எம்.பி ஒருவர் என்னை தூக்கிலிட வேண்டுமென்கிறார்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஏனைய மதத்தவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மதங்கள் தொடர்பில் உள்ள பிரச்சினைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் பிரிவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவொரு நல்ல விடயம் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...