முறைசாரா தாம்பத்திய உறவை (LGBTQ+) குற்றமற்றதாக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

Date:

இலங்கையில் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான சட்டத்தை சிறிய பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ அல்லது தேசிய வாக்கெடுப்போ தேவையில்லை என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மூன்று மனுதாரர்கள் இந்த மசோதாவை எதிர்த்து, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், அது அரசியலமைப்புக்கு முரணானது ஆகவே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

இலங்கையில் உள்ள LGBTQ+ உரிமை ஆர்வலர்கள் ஓரினச்சேர்க்கைக்கு இன்னும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நிதியுதவி கிடைக்க வேண்டுமென்றால் இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டுமென்று நிபந்தனையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...