கம்பளையில் 22 வயதுடைய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்பு!

Date:

கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்கு வீட்டை விட்டு வெளியேறிய யுவதியொருவர் கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா முனவ்ரா (22) என்ற பெண்ணே கெலிஓயா பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) வீட்டில் இருந்து பணிக்கு சென்ற அவர் காணாமல் போயுள்ளார்.

வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள எல்பிட்டிய பள்ளிவாசலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அவர் மசூதியை கடந்து செல்வதை கண்டதாக அவரது சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்துக்கு அப்பால் பொருத்தப்பட்டிருந்த மற்ற சிசிடிவி கேமராக்களில் அல்லது அவளைப் பார்த்த எவரிடமும் அவளது தடயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

கெலிஓயாவுக்கு பஸ்ஸைப் பிடிக்க, அவர் தனது வீட்டிலிருந்து இரண்டு மைல் தூரம் தனிமையான நிலப்பரப்பு வழியாக நடக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை (7) காலை பாத்திமா தனது பஸ் கட்டணத்திற்காக 100 ரூபாயை  பெற்று வேலைக்குச் சென்றதாகவும், மருந்தக உரிமையாளர் தம்மை அழைத்து, பாத்திமா வழமை போன்று பணிக்கு வரவில்லை எனவும், சாவியையும் எடுத்துச் சென்றதாகவும் அவரது தாய் சித்தி சாஹிரா தெரிவித்தார்.

வெலிகல்ல மற்றும் எல்பிட்டிய பகுதிகளில் உள்ள மகாவலி ஆற்றின் கரையோர வனப் பிரதேசத்தில், பிரதேசவாசிகளின் உதவியுடன்  தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது கையடக்கத் தொலைபேசி தற்போது செயலிழந்துள்ளதாகவும், தொலைபேசி பதிவுகளை ஆராய நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பெண் காட்டுக்குள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...