குரங்குகள் ஏற்றுமதி குறித்து உண்மைகளை தெரிவிக்க ஜூன் 26ம் திகதி வரை காலக்கெடு!

Date:

குரங்குகள் ஏற்றுமதிக்கு எதிரான மனு தொடர்பான உண்மைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) சட்டமா அதிபருக்கு ஜூன் 26ம் திகதி வரை கால அவகாசம் வழங்கியது.

இலங்கையின் 100,000 குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதுடன், இந்த நடவடிக்கையின் மூலம் பாரிய மிருகவதைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்காக சீனாவில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...