கொழும்பில் திடீரென தீவிரமாக்கப்பட்ட பாதுகாப்பு: தயார் நிலையில் படையினர்!

Date:

கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் சுமார் 750 பேரை கொண்ட குழுவொன்று, அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படவுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார், விசேட அதிரடிபடையினர், கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் முப்படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு சுதந்திர சதுக்கம், கொள்ளுபிட்டி முச்சந்தி, அலரிமாளிகை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...