கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும், அந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு மரணமும் பதிவாகியது , தொடர்ந்து மே 01 ஆம் திகதி ஒரு இறப்பு மற்றும் மே 5 ஆம் திகதி மேலும் மூன்று கொவிட் இறப்புகலும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் துறை மேலும் கூறுகிறது.
இதேவேளை, கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் ஒரு மரணமும், 11ஆம் திகதி மேலும் இரண்டு மரணங்களும், 12ஆம் திகதி இரண்டு மரணங்களும், 14ஆம் திகதி ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.