சீனி விலை அதிகரிப்பு: நுகர்வோர் அதிகாரசபையின் விசேட கவனம்

Date:

சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சீனியின் விலையை அதிகரிப்பதற்காக வர்த்தகர்கள் கையிருப்புகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பில் துரித சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரசபை எதிர்பார்த்துள்ளது.

இவ்வாறு சீனி கையிருப்புகளை மறைத்து வைத்தால், அவை நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் நாட்டில் சுமார் 02 மாதங்களுக்கு போதுமான சீனி கையிருப்பில் உள்ள பின்னணியில் சீனியின் விலை அவ்வப்போது அதிகரிக்கின்றது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...