சூடானில் துருக்கி தூதுவரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது!

Date:

துருக்கி  தூதுவரின் வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு பிறகு, சூடானின் தலைநகரான கார்ட்டூமில் உள்ள தனது தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர்  Mevlut Cavusoglu சனிக்கிழமை அறிவித்தார்.

“எங்கள் தூதரகம் மற்றும் எங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, நாங்கள் எங்கள் தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்தோம், என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கி தூதுவர் இஸ்மாயில் கோபனோக்லு சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) ஆகிய இருவருடனும் இந்த பிரச்சினையை விவாதித்து, இடமாற்றத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்ததாக துருக்கி  அமைச்சர் மேலும் கூறினார்.

சனிக்கிழமையன்று சூடானுக்கான துருக்கி தூதுவரின் உத்தியோகபூர்வ வாகனம் துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது, அதே நேரத்தில் வாகனம் சேதமடைந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தாக்குதல் நடந்த பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிய RSF, நாட்டில் உள்ள தூதரகப் பணிகளைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...