செப்டெம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யலாம் :ஜனாதிபதி

Date:

இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செப்டெம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கடனாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் “குறிப்பிடத்தக்க” முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கை மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தைக்கான பொதுவான தளத்தை வெளியிட்டன.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...