ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணையை எதிர்க்க பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

Date:

இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபாகய, டலஸ் அணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்டவை குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரச பங்காளிக் கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

இருப்பினும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள் இதுவரையில் தெரியவரவில்லை.

இந்நிலையில் நாளை நடைபெறும் பாராளுமன்றம் அமர்விலேயே ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...