“ஞாயிற்றுக்கிழமை வருகின்றேன்” சர்ச்சைக்குரிய போதகர் அறிவிப்பு!

Date:

ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ விஷேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“வணக்கம் குடும்பத்தினரே, நீங்கள் அனைவரும் அறிந்தது போல, நான் முன்பு திட்டமிடப்பட்ட அதிகாரப்பூர்வ பயணங்களில் ஈடுபட்டு வருகிறேன், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன்” என்று ஒரு செய்தியை வெளியிட்டார்.

ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவர் கடந்த 14 ஆம் திகதி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும, ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத் தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜெரம் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...