தினசரி 12 மணித்தியாலங்கள் வேலை மாற்றத்திற்கு திட்டமிடும் அரசாங்கம் ?

Date:

அரசாங்கம் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சில தொழிற்சங்க குற்றச்சாட்டுகளை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார். .

“தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்கள் தவறானவை. நாங்கள் பொது ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளோம், அதன் பிறகு நாங்கள் ஒரு முன்மொழிவை உருவாக்க வேண்டும்,” என்று அமைச்சர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். .

முன்னதாக, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் கூட்டுத் தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் கூறுகையில்,

வாரத்தில் 4 நாள் வேலை என்று 3 நாட்கள் வார விடுமுறையுடன் அறிமுகப்படுத்தி 8 மணி நேர ஷிப்டுக்குப் பதிலாக 12 மணி நேர வேலை மாற்றத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய நடவடிக்கையால் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகளை இழக்க நேரிடும். இந்த மாற்றத்தைத் தடுக்க அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார் .

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...