மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் நீதித்துறை மேற்பார்வையின் கீழ் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணியின் போது மறைந்த ஷாஃப்டரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட நீதித்துறை மற்றும் சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய ஐவர் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை (19) சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதியளிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியது.