ஆசிரியரின் கலாசார ஆடையான ஹபாயா விவகாரத்தை முன்னிட்டு இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் ஆடை சுதந்திரத்திற்காகவும் நீதிமன்றத்தில் 05 வருடங்களாக விவாதித்து வழக்கை வென்று தந்த குரல் என்ற அமைப்பின் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தது.
இந்நத விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
திருகோணமலை சண்முகா ஆசிரியர் அபாயா ஆடை விவகாரம் தொடர்பில்குரல் கொடுத்தஇ முயற்சிகள் செய்த, அல்லாஹு தஆலாவிடத்தில் குறித்த ஆசிரியைக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவும் இருகரம் ஏந்திய அனைவருக்கும் ஈருலகத்திலும் நலவுகளை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாகவும் உலமா சபை தெரிவித்துள்ளது.
ஆசிரியரின் விடயத்தில் நீதிமன்றம் நாட்டின் யாப்பின் அடிப்படையிலும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பிரஜைகளுடைய அடிப்படை மத உரிமைகளை கவனத்தில் கொண்டும் நியாயமான, நீதமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது எமது நாட்டின் நீதித்துறையின் நேர்மையையும் சுயாதீனத்தையும் எடுத்துக்காட்டுவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சுட்டிக்காட்டியுள்ளது.