துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருக்கும் நிலையில், இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
மே 14ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால் கிலிக்சதரோ ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் துருக்கியின் காந்தி என அழைக்கப்படுகிறார்.
ஜனாதிபதி அர்தூகான் ஆட்சியில் துருக்கி ஒரு சர்வாதிகார நாடாகவே மாறிப்போன நிலையில், அந்த நிலையை மாற்ற எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
வேகமாக அதிகரிக்கும் பண வீக்கம், இரு நிலநடுக்க பாதிப்புக்களில் 50,000 பேர் உயிரிழந்தது போன்ற பிரச்சினைகளின் தாக்கம் காரணமாக அர்தூகான் முன்னால் உள்ள சவால்கள் அதிகரித்துள்ளது.
எனினும், அர்தூகான் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதற்கு முன், 2003 முதல் 2014 வரை மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார்.
அதன் பிறகு அவர் தொடர்ந்து அதிபராக இருந்து வருகிறார். இப்போது வரை அவருக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல் போட்டி சற்று எளிதாக இருந்தது. ஆனால் இந்த முறை அவருக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன.
துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் கெமல் கிளிக்டரோக்லு அவரது முக்கிய போட்டியாளர்.
கெமால் கிலிக்டரோக்லு வட்டக் கண்ணாடியால் மகாத்மா காந்தியைப் போல் தோற்றமளிப்பதுடன் மிகவும் கண்ணியமானவர், எனவே துருக்கியே ஊடகங்கள் அவரை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடுகின்றன.
வெள்ளிக்கிழமை, அவர் ஆதரவாளர்கள் மத்தியில், ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றினார்.
அமைதியையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுப்பதாக அவர் சபதம் செய்தார். துருக்கி முக்கியமாக மோசமான பொருளாதாரம், பணவீக்கம் மற்றும் பிப்ரவரியில் பேரழிவு தரும் பூகம்பம் ஆகியவை காரணமாக சிக்கலில் உள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரமான நிலநடுக்கம் இருந்தபோதிலும், நாட்டை வலுவாக வைத்திருந்ததாக அர்தூகான் கூறுகிறார். கருத்துக் கணிப்புகளின்படி கிளிக்டரோக்லு முன்னிலையில் உள்ளார்.
அவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். மார்ச் மாதம் அவர் எதிர்க்கட்சிகளின் அதிபர் வேட்பாளராக ஆறு பலமான கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. கிளிக்டரோக்லுவின் குடியரசு மக்கள் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி.
துருக்கியில் பதற்றம்
தேர்தலுக்கு முன்னதாக துருக்கியில் பெரும் பதற்றம் நிலவியது. ஒரு நிகழ்வின் போது கிளிக்டரோக்லு குண்டு துளைக்காத உடையை அணியும் அளவிற்கு துருக்கியில் பதற்றம் அதிகரித்தது.
முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான முஹர்ரம் இன்சே வியாழக்கிழமை தனது பெயரை வாபஸ் பெற்றார்.
இதன் பின்னணியில் ஆட்சேபனைக்குரிய போலி வீடியோ இருப்பதாகவும், இது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் பின்னணியில் ரஷ்யாவின் கைவரிசை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அர்தூகானுக்கும் புதினுக்கும் இடையிலான உறவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கின்றன. எனினும், புடினுக்கு எதிராம்ன கருத்துக்களை தான் பொருட்படுத்த மாட்டேன் என எர்டோகன் கூறி வருகிறார்.