இலங்கையில் தற்போது கடுமையான வெப்பம் நிலவிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனடிப்படையில், 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
மேலும், வடக்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய அளவு வெப்பம் நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அதிக வெப்பமான நேரங்களில் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.