நாளைய தினம் கொழும்பில் 6 வெசாக் வலயங்கள்; 125 தன்சல்கள்!

Date:

கொழும்பு நகரில் 6 வெசாக் வலயங்கள் உள்ளதாகவும், இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக 125 பதிவு செய்யப்பட்ட தன்சல்கள் இருப்பதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை, புத்தசாசன அமைச்சு, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து கொழும்பு நகரம் மற்றும் புத்தி ரஷ்மி வெசாக் வலயம், வலுகாராமய வெசாக் வலயம் முழுவதும் விசேட வெசாக் பூஜோத்சவ நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

பௌத்தலோக மாவத்தை வெசாக் வலயம்., புரஹல வெசாக் வலயம், துறைமுக அதிகாரசபையைச் சுற்றியுள்ள வெசாக் வலயம் மற்றும் சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வெசாக் வலயம் என 6 வெசாக் வலயங்கள் கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலும், காலி முகத்திடல்  பகுதியில் மாபெரும் தன்சல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நேற்று (03) வரை 125 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து வெசாக் வலயங்களிலும் பொதுமக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக தேசிய நீர் வழங்கல் சபையுடன் இணைந்து நீர்த்தாங்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...