நாளை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (08) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதியிலும், மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, அத்துல்கோட்டே, வரையிலான பிரதான வீதியிலும் நீர் விநியோகம் தடைப்படும்.