ரியாத் நகரில் திறக்கப்பட்ட ‘வியாரியாத்’ ஆடம்பர மையம்!

Date:

கடந்த மே 11ஆம் திகதி சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் மிக ஆடம்பரமான சுற்றுலா மற்றும் பொழுது போக்கு தலம் ‘வியாரியாத்’ திறந்து வைக்கப்பட்டது.

நவீனத்துவம் மற்றும் ஆடம்பரத்துடன் இணைந்த சல்மானிய கட்டிடக் கலைபாணி, இப்பகுதியை தனித்துவப்படுத்திக் காட்டுவதோடு சவூதி அரேபியாவின் தனித்துவமான பாரம்பரியத்தையும் புகழ் பெற்ற அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.

சவூதியின் தலைநகரில் மிகவும் ஆடம்பரமான இந்த பொழுது போக்கு தலத்தைத் திறப்பது, 2023 ஆம் ஆண்டிற்கான பொழுதுபோக்குத் துறையில் சவூதி அரேபியாவின் பயணத்தில் ஒரு முக்கிய முயற்சியாக இருக்கும்.

மேற்கூறப்பட்டவாறு ‘வியாரியாத்’ தலமானது சல்மானிய கட்டிடக் கலைபாணியில் கட்டப்பட்டுள்ள அதேநேரம், நம்பகத்தன்மை, மனித-மையப்படுத்தல், வாழ்வாதாரம், தொடர்தன்மை, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை போன்ற மன்னர் சல்மானின் ஆறு முக்கிய விழுமியங்களின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

மேலும் இது பாரம்பரிய மற்றும் நவீன கட்டிடக்கலையின் கலவையாக காணப்படுகிறது. பசுமையான இடங்களுக்கு முக்கியத்துவம் அழிக்கப்பட்டிருத்தல் இந்தகட்டிட அமைப்பின் முக்கியத்துவங்களில் ஒன்றாக இருப்பதோடு பட்டத்து இளவரசர், பிரதமர் முஹம்மத் பின் சல்மான் அவர்கள் தலைமையில் முன்னெடுத்து செல்லப்படுகின்ற Vision 2030 என்ற சவூதி அரேபியாவின் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.

இந்த தலமானது பலவகைக்கடைத்தொகுதிகள், உணவகங்கள், திரையரங்கங்கள் மற்றும் நேரடி நிகழ்வுகளை நடத்துவதற்கான ஆடம்பரதியேட்டர் அமைப்புகளை கொண்டுள்ளதோடு மிகவும் முக்கியமாக செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலும் இதற்குள் அமைந்துள்ளது. இந்த தலமானது ரியாதில் அல்-சபராத் பகுதியில் அதாவது ‘Diplomatic Quarter’என அழைக்கப்படக் கூடிய பகுதியில் அமையப் பெற்றிருக்கிறது.

உலகில் உள்ள அதி புகழ் வாய்ந்த ஆடம்பர ஆபரணப் பொருட்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடிய தனித்துவமான கடைத்தொகுதிகள், Phoenix Ancient Art, Richard Orlinski, Artfeena போன்ற புகழ்பெற்ற கலை அம்சங்களை விற்பனை செய்யக்கூடிய விற்பனை நிலையங்கள் மற்றும் புகழ் பெற்ற பழங்காலகார்களை காட்சிப்படுத்தும் ‘Seven Gallery’என்ற காட்சித்தலம் போன்றன வியாரியாத் தலத்தில் அடங்கியுள்ளன.

தனித்துவமான பல வித்தியாசமானபுதிய அம்சங்களைக் கொண்டமைந்த திரையரங்கங்களை கொண்டிருப்பது வியாரியாத்தலத்தின் முக்கியத்துவங்களில் ஒன்றாகும். ‘ஜிம்கன்னா’ மற்றும் ‘ஸ்பாகோ’ போன்ற ‘இரண்டு-மிச்செலின்-நட்சத்திரம்’போன்ற உணவகங்கள் உட்பட பல உயர்தர சர்வதேச உணவகங்கள் மற்றும் கஃபேக்களையும் ‘வியாரி யாத்’ கொண்டுள்ளது.

இந்த இடத்தில் காணப்படக்கூடிய நேரடி நிகழ்வுகளை நடத்துவதற்கான தியேட்டர் பிரபல சவூதி பாடகர் அப்துல் மஜீத் அப்துல்லாவால் மே 18 அன்று திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாசமான ஒரு சூழல், பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரம் போன்ற எதிர்பார்ப்புகளுடன் ரியாத் நோக்கி வரும் சுற்றலாப் பயணிகள், சவூதி வாழ் மக்களுக்கு இந்த புதிய ‘வியாரியாத்’ தலமானது மிகச் சிறந்த இடமாக அமைகிறது.

‘ வியாரியாத்’ அதன் அனைத்து கட்டமைப்பு முறைமை மற்றும் ஏனைய அம்சங்களில் உயர்தர வடிவமைப்புகளை பிரதிபலிக்கும் வகையிலே அமைந்திருக்கிறது.

பொழுதுபோக்கிற்கான இடங்களின் அடிப்படையில் இது தனித்துவமாக காணப்படுகிறது. இதன்கலை மற்றும் அழகியல் அம்சங்கள் கண்களை  வரக்கூடியதாக இருக்கிறது.

குவாலிட்டி ஆஃப்லைஃப் (QoL) திட்ட மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காலித் அல்பக்கர்,

சவூதி அரேபியாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தரமான திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

பொதுபொழுதுபோக்கு ஆணையம் மற்றும் சவூதி தலைமையின் ஆதரவுடன், இராச்சியத்தின் தலைநகரில் உள்ள புகழ்பெற்ற திட்டங்களில் வியாரியாத் ஒன்றாகும்.

(QoL) திட்டமானது தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட Vision 2030 திட்டங்களில் ஒன்றாகும்.

சல்மானிய பாணியிலமைந்த கட்டட வடிவமைப்புகள், சர்வதேச உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், ஆடம்பரமான திரையரங்குகள் மற்றும் ஷாப்பிங் சேவைகளைக் கொண்ட வியாரியாத், தலைநகரின் கவர்ச்சி போன்றவற்றை மேம்படுத்தும் புதிய அளவிலான ஆடம்பரத்தை வழங்குகிறது என்று மேலும் அல்பக்கர் அவர்கள் கூறினார்.

சவூதி அரேபியாவின் விஷன் 2030ன் இலக்குகளை அடைவதற்கான பெரிய முயற்சிகளின் ஆரம்பம் மட்டுமே இந்தத் திட்டங்களாகும்.

எழுத்து: காலித் ரிஸ்வான்

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...