வெளிநாட்டு வெசாக் அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்ததன் மூலம் நாட்டுக்கு 900 மில்லியன் ரூபா மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி வெசாக் அலங்காரங்களுக்கு புதிய சந்தை உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வெசாக் அலங்காரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் வெசாக் அலங்காரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.