வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

Date:

வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் மாத்திரம் இது தொடர்பில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யபா தெரிவித்தார்.

“2021ஆம் ஆண்டில், வெளிநாட்டு வேலைகளுக்காக மோசடியாகப் பணம் பெற்றுக்கொண்டதாக 552 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது 2022ஆம் ஆண்டில் 1,337ஆக அதிகரித்துள்ளது.

து இந்த ஆண்டு 5 மாதங்களுக்குள், பணியகத்திற்கு ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளமை வருத்தமளிக்கிறது.

இது தொடர்பான பகுப்பாய்வில், மக்கள் மிக விரைவாக ஏமாற்றப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

மக்களை ஏமாற்றி அவர்களுக்கு வெளிநாட்டு வேலைக்கான ஆசைக் காட்டுகின்றனர். இதற்காக, சில மோசடியான நபர்கள் செயற்படுகின்றார்.

ஏமாற்றப்படும் மக்களிடம் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...