இந்திய பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான’ஆர்டர்ஆஃப் தி நைல்’விருது!

Date:

பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நை ல்’ விருது வழங்கப்பட்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி, அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சிசி சந்திப்பு நடைபெற்றது.

கெய்ரோ அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி வாயிலுக்கு வந்து வரவேற்றா ர்.

பிரதமர் மோடி, அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இடையேயான சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சி சி விருதை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக இன்று காலை ஹெலியோ பொலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு
சென்ற பிரதமர், முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
செலுத்தினார்.

கெய்ரோவில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அல்-ஹக்கீம் மசூதி யையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்தியாவிலுள்ள தாவூதி போரா சமூகத்தவரின் நிதி உதவியுடன் அல்-ஹக்கீம் மசூதி அண்மையில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...