இலங்கையின் ஆபத்தான சட்டங்கள் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை முடக்கின்றது: ஐ.நா கவலை!

Date:

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவும்வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று மூன்றாம் நாள் அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான தனது வாய்மொழிமூல அறிக்கையை வாசித்தார்.
இதன்போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் இலங்கை மக்களின் உரிமை மற்றும் நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சீர்திருத்தத்தின் சுமைகள் சமத்துவம் இன்மைகளை மேலும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் மிகவும் நலிந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலையமைப்புகள் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்

துரதிஸ்டவசமாக மிகவும் ஆபத்தான சட்டங்கள் எதிரணியினரை கட்டுப்படுத்துவதற்கும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதை கடந்த மாதங்களில் பார்க்கமுடிந்துள்ளதாகவும் ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அனேகமான தருணங்களில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான பலவந்தமான முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், பொலிஸாரின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...