எம்.பிக்களின் மாதிவெல வீடுகளுக்கு இலட்சக்கணக்கில் செலவு: RTIயில் வெளியான அதிர்ச்சி தகவல்

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல வீட்டுத் திட்டத்தின் சிவில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவு கடந்த மூன்று வருடங்களில் 72 இலட்ச ரூபாயை தாண்டியிருக்கிறது.

சட்டவாக்கத் துறையினர் என்ற வகையில் தமது கடமைகளை வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்வதற்காக தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உரித்துடையவர்களாக இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர் சேவைகள் அலுவலகத்தின் ஊடாக, எம்.பிக்கள் இந்த சேவையை பெறுகிறார்கள்.

மாதிவெல வீட்டுத் தொகுதியில் 120 வீடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் மூன்று படுக்கை அறைகளையும் ஒரு களஞ்சிய அறையையும் சாப்பாட்டு / வதிவிடப் பகுதியையும் பணியாளர் கழிவறைகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளையும் கொண்டுள்ளது. 900 சதுர அடி பரப்பில் ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்துக்கு வெளியே உள்ள எம்.பிக்கள் அமர்வு நாட்களில் சபைக்கு வருவதில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த மாதிவெல வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.

இந்த வீடுகளின் பராமரிப்பு செலவுகள் தொடர்பான தகவல்கள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் மாதிவெல வீட்டுத் தொகுதியின் பராமரிப்புக்காக 72 இலட்சத்து 73 ஆயிரத்து 781 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பதில் வழங்கியுள்ளது.

இந்த வீடுகளை பராமரித்து, வர்ணம் பூசி, பழுது பார்க்க 72 இலட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு 65 வீடுகளுக்கு 35 இலட்சத்து 9 ஆயிரத்து 798 ரூபாயும்

2021ஆம் ஆண்டு 64 வீடுகளுக்கு 25 இலட்சத்து 65 ஆயிரத்து 675 ரூபாயும்

2022ஆம் ஆண்டு 58 வீடுகளுக்கு 11 இலட்சத்து 98 ஆயிரத்து 308 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பா.நிரோஸ் விண்ணப்பித்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவல்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...