ஒரு வருடத்திற்கு மேல் திரிபோஷ விநியோகம் இடைநிறுத்தம்: போஷாக்கு தொடர்பில் பாரிய சிக்கல்கள்

Date:

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவது ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் குழந்தைகளின் போஷாக்கு நிலை தொடர்பில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்க தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

சோளத்தில் உள்ள அஃப்லாடோக்சின் சதவீத பிரச்சினை காரணமாக திரிபோஷ உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு மத்தியில் சமீபகாலமாக ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்க தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...