கண்டி நகரில் நாளைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளது.
12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கண்டி நகரில் நாளை முற்பகல் 9.30 முதல் மதியம் 12 மணிவரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.