கிளிநொச்சியில் துப்பாக்கி பிரயோகம்!

Date:

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (28) அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத இருவர், இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 38 வாயதான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் பயணித்த காயமடைந்த நபர் உள்ளிட்ட மூவர் கனகபுரம் பகுதிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

Popular

More like this
Related

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...