குருநாகலில் இடம்பெற்ற பெண்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கான தலைமைத்துவம் குறித்த பயிற்சி செயலமர்வு!

Date:

பெண் அரசியல் தலைமைத்துவம் மற்றும் சமூகத் தலைவர்களுக்கான தலைமைத்துவம் குறித்த இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு கடந்த மே மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குருநாகலிலுள்ள புளூ ஸ்கை ஹோட்டலில் நடைபெற்றது.

NPC இன் PACT செயற்றிட்டத்துடன் இணைந்து குருநாகல் மாவட்டத்திற்கான இலங்கை தேசிய சமாதான பேரவை இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிற்சி செயலமர்வில் மொத்தமாக 37 பேர் பங்கேற்றிருந்ததுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட 29 வேட்பாளர்களும் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் சமூகத் தலைவர்கள் 8 பேரும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் பங்கேற்றனர்.

இச் செயலமர்வில், திரு.தர்மசிறி மற்றும் திரு.வீரசிங்கம் ஆகியோர் வளவாளர்களாக பயிற்சி செயலமர்வை முன்னெடுத்ததுடன், திரு.தர்மசிறி உள்ளுராட்சி சட்டம் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்துடன் திரு. வீரசிங்கம் தலைமைத்துவம் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்தினார்கள்.

பாலின அடிப்படையிலான தலைமைத்துவத்திற்கான தடைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளித்து முன்னேறுவது என்பது பற்றியும் இதன்போது அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...