குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

Date:

இலங்கையின் முதலாவது குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையமான “சுவ அரன” மஹரகமவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மற்றொரு வீடாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடனும் 6 மாடிகளுடனும் கூடிய இந்த கட்டிடத்தில் நோயாளிகளுக்கான அறைகள், தோட்டம் மற்றும் பிரத்யேக சமையலறை உள்ளது.

குழந்தை புற்று நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வளரும் வகையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மையம் “இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின்” கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...