பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியிருந்தது.
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மஹாபொல உதவித்தொகை அதிகரிக்க வேண்டும், தாமதமான மஹாபொல உதவித்தொகை வழங்கப்பட வேண்டும், ஐந்து மாதங்களாக சிறையில் இருக்கும் மாணவர் செயற்பாட்டாளர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் பேரணியானது கொழும்பை சென்றடைய தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் கொழும்பில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தடை உத்தரவு காரணமாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இந்து போராட்டம் காரணமாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கலகத்தடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.