சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி பதவி விலகினார்

Date:

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.

குறித்த மாகாணங்களின் முன்னையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது.

அதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...