சிறப்பாக நிறைவடைந்த தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழா!

Date:

புத்தளம் தில்லையடி அல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு தாருல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீன் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொண்டதோடு, சர்வ மதத்தலைவர்களான பொகந்தலாவ ராகுல தேரர், அகில சிவஸ்ரீ பாலநாத் குருக்கள் அவர்களும் புத்தளம் மெதடிஸ் தேவாலயத்தின் யோகான் ஜெயராஜ் அவர்களும் அனுசாசன உரையை வழங்கினார்கள்.

ஏராளமான பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் 41 மாணவர்கள் மௌலவிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த 20 மாணவர்களுக்கு ஹாபிழ் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விசேடமாக மலேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரும், இவ்விழாவில் அதிதிகளாகக் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.


2000.06.15இல், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ முபாரக் ரஷாதியின் முழு முயற்சியிலும், மௌலவி ஏ.ஆர்.பரீதின் ஒத்துழைப்பிலும் ஆரம்பமான இக்கல்லூரியானது முழுநேர ஷரிஆ கல்லூரியாகவும் ஹிப்ழு பிரிவையும் உள்ளடக்கியதாகவும் இயங்கி வருவதோடு ஷரிஆ பாடத்திட்டத்தையும் உள்வாங்கி  சிறப்பாக இயங்கி வருகின்றது.

பல மாணவர்களும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்கலைக்கழக கல்வியை மேற்கொண்டு உயர்கல்வியிலும் பிரகாசிக்க தொடங்கியுள்ளார்கள்.

எதிர்காலத்தில் இன்னும் பல முன்னேற்றகரமான திட்டங்களையும் இக்கல்லூரி முன்னெடுக்கவிருப்பதாக இவ்விழாவின் போது அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தை தளமாகக்கொண்டு இயங்குகின்ற ‘ஐ’ மீடியா நிறுவனம் இவ்விழாவை தனது முகப்புத்தகத்தில் நேரலையினூடாக ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...