சீனாவில், உணவகமொன்றில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 31 பேர் உயிரிழப்பு

Date:

சீனாவில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

டிராகன் படகு திருவிழாவுக்காக சீனாவில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதை கொண்டாட பலர், நேற்றிரவு யின்சுவான் நகரில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் குவிந்திருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி, உணவகம் முழுவதும் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உயரிய சிகிச்சையளிக்க சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...