ஜெரோம் பெர்னாண்டோவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Date:

தன்னை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ். துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு இன்று அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இடையீட்டு மனுவை சமர்ப்பித்த எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்டோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன காரணிகளை முன்வைக்க அவகாசம் கோரியிருந்தார்.

அதன்போது மனுதாரர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன அதற்கு ஆட்சேபனை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், மனு தொடர்பான காரணிகளை முன்வைக்க எல்லே குணவன்சே தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...