கடவுச்சீட்டுக்களை இணையத்தளம் வழியாக வழங்கும் முறைமை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், எவருக்காவது அவசியமாக இருந்தால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வந்தும் விண்ணப்பத்தை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் சேவை வழமைப்போல் நடைபெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்ப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த பின்னர், மூன்று தினங்களுக்குள் விண்ணப்பதாரியின் வீட்டுக்கு கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.