பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Date:

தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் சம்பந்தமாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து நேற்று நடத்திய கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொலையாளிகள் சம்பந்தமாக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இதற்கான நடவடிக்கைகளின் போது, தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கவும் தலையீடுகளை செய்யவும் எவருக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் அமை்சசர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் கடமையாற்றும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் திறமையின்மையே இந்த மாகாணங்களில் கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அப்படியான அதிகாரிகளை உடனடியாக நீக்கி விட்டு, தகுதியான அதிகாரிகளை நியமிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...