கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (07) மாலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இரண்டு மணித்தியாலயங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எவ்வாறாயினும், கிளிநொச்சி பொலிஸாருக்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் வாயை கறுப்புப் துணியால் மூடிக்கொண்டு மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.