பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோ நியமனம்

Date:

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCS) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி வெற்றிடத்திற்கு நிதியமைச்சராக பேராசிரியர் பெயர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக ரத்நாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...