இவர் போரில் காயமடைந்த சுமார் 500 சிரிய யாத்திரிகர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
அவர்களின் பயணம் மற்றும் தங்குமிட செலவுகள், அத்துடன் பயண ஆவணங்கள் மற்றும் ஹஜ் அனுமதிகளை அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இதேவேளை நான் என் கால்களை இழந்தேன், ஆனால் அவரது புனித கஃபாவை பார்வையிடும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு ஈடுசெய்தான் என்று சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள அட்மே முகாமில் வசிக்கும் எட்டு குழந்தைகளின் தந்தை இஸ்மாயில் அல்-மஸ்ரி கூறினார்.
நேற்றைய கனவு இன்று நனவாகியுள்ளது. நான் கஃபாவின் அருகே என் ஒற்றைக் காலில் நின்று அல்லாஹ்வின் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறுவேன். நான் இழந்த பாதத்திற்கு சொர்க்கத்தில் சிறந்ததை நஷ்டஈடாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” என்று அல்-மஸ்ரி கூறினார்.