மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும்.

இராஜதந்திர தரப்புகளின் தகவல்களின் படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது அவர், இலங்கையில் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் முன்னேற்றம் இன்மை என்பதை சுட்டிக்காட்டுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் ஜெனீவாவில் நடைபெறும் அமர்வுகளில், இலங்கை தொடர்பான முக்கிய நாடுகள் குழு முறையான அறிக்கையை வெளியிடவுள்ளன.

கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை தன்னிச்சையாக கைது செய்தமை, பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் என்பன இதில் சுட்டிக்காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...