வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

Date:

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சில பகுதிகளில் உரிய முறையில் வாக்காளர் இடாப்பு திருத்தம் இடம்பெறவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை சிறந்த நிலையை அடைந்ததன் பின்னர் மீண்டும் தேர்தலுக்கான நிதியை திறைசேரியிடமிருந்து கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...