அடுத்த வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பாக தயாரிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் இன்று (12) அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தப் புதிய விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சர்கள் சபையின் அங்கீகாரம் கிடைத்தவுடன், முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.
புதிய விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தில் தேவையுடைய சிறுவர்களை முதலாம் தரத்திற்கு உள்வாங்குவது தொடர்பான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.