அதிகமான இடங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்.

அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை.

மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும்.

காலி – அடிக்கடி மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...