கல்வி மற்றும் மத விவகார ஆலோசனை சபைக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 1ஆம் திகதி கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தில் ஆன்மீக முன்னேற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் 128 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத் தலைவர்கள் உட்பட கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
